ADDED : ஜூலை 31, 2025 03:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மிர்சாபூர்:குடும்பத் தகராறில், மனைவியை அடித்துக் கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார்.
உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டம் கஜூரி கிராமத்தில் வசிப்பவர் ரோஹித்,30. இவரது மனைவி ரூபா,26. இருவருக்கும் இடையே நேற்று மதியம் தகராறு ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த ரோஹித், வீட்டில் இருந்த இரும்புச் சட்டியை எடுத்து, ரூபா தலையில் சரமாரியாக தாக்கினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த ரூபா, அதே இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த கோட்வாலி போலீசார், ரூபா உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கைது செய்யப்பட்டுள்ள ரோஹித்திடம் விசாரணை நடக்கிறது.