ADDED : அக் 16, 2025 02:16 AM
திருவனந்தபுரம்: பேய் விரட்டுவதாக க ூ றி, கல்லுாரி மாணவியை பலாத்காரம் செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், முட்டிலை சேர்ந்த குஞ்சுமோன், 42, என்பவர், கோழிக்கோடு அருகே பரம்பில்காவில் வசிக்கிறார். வயநாடு மாவட்டம், சேவாயூரை சேர்ந்த ஒரு கல்லுாரி மாணவி துாக்கத்தில் அலறுவதாக கூறி, அவரது பெற்றோர் மந்திரவாதி யிடம் அழைத்து வந்தனர்.
அவர், 'மாணவிக்கு பேய் பிடித்துள்ளது; பேயை விரட்ட சிறப்பு பூஜைகள் நடத்த வேண்டும்' என்றார்.
தான் கூறும் நாளில், பூஜை பொருட்களுடன் மாணவியை மட்டும், தன் இருப்பிடத்திற்கு அனுப்பி வைக்குமாறு குஞ்சுமோன் கூறினார்.
அதன்படி மாணவி பூஜை பொருட்களுடன், மந்திரவாதியின் வீட்டுக்கு சென்றார். மாணவியை அங்குள்ள ஒரு அறைக்கு அழைத்து சென்று மயக்க மருந்து கலந்த தண்ணீர் கொடுத்து, பலாத்காரம் செய்து, வீடியோவும் எடுத்தார்.
சில நாட்கள் கழித்து மாணவியை தொடர்பு கொண்ட குஞ்சுமோன், வீடியோ இருப்பதாக கூறி மிரட்டி, அங்குள்ள லாட்ஜுக்கு வரவழைத்து மீண்டும் பலாத்காரம் செய்தார். மாணவி புகாரின்படி, சேவாயூர் போலீசார், குஞ்சுமோனை கைது செய்தனர்.