பிஷ்னோய் கும்பலுக்கு தொடர்பா? சல்மான் கான் படப்பிடிப்பு தளத்தில் அத்துமீறி நுழைந்த நபர்!
பிஷ்னோய் கும்பலுக்கு தொடர்பா? சல்மான் கான் படப்பிடிப்பு தளத்தில் அத்துமீறி நுழைந்த நபர்!
ADDED : டிச 05, 2024 07:09 AM

மும்பை: பாலிவுட் நடிகர், சல்மான் கான் படப்பிடிப்பு தளத்தில் அத்துமீறி நுழைந்த நபரை போலீசார் கைது செய்தனர். பிஷ்னோய் கும்பலுக்கு தொடர்பு உள்ளதா என்று போலீசார் விசாரிக்கின்றனர்.
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான். இவருக்கு வயது 58. இவர் மும்பையின் பாந்த்ரா பகுதியில் வசித்து வருகிறார். கடந்த ஏப்., 14ம் தேதி அதிகாலை அவர் வீடு அருகே துப்பாக்கிச்சூடு நடந்தது. இச்சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, இவருக்கு மர்மநபர்கள் மிரட்டல் விடுத்து வருகின்றனர். சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளி, மும்பையைச் சேர்ந்த ஷேக் ஹூசைன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சூழலில், சல்மான் கானுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் சல்மான் கான் படப்பிடிப்பு தளத்தில், ஒருவர் சட்டவிரோதமாக நுழைய முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நபரை மும்பை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். பிஷ்னோய் கும்பலுக்கு தொடர்பு உள்ளதா என்று போலீசார் விசாரிக்கின்றனர். சல்மானின் பாதுகாப்பை பலப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.