ADDED : செப் 14, 2025 11:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்ட வாலிபர், உத்தர பிரதேச மாநிலம் போபுராவில் கைது செய்யப்பட்டார்.
டில்லி பிரதாப் நகர் சி பிளாக் வாகன நிறுத்துமிடத்தில் கடந்த 5ம் தேதி, சுதிர் மற்றும் ராதே பிரஜாபதி ஆகிய இருவரும் துப்பாக்கியால் சுடப்பட்டனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
ஹர்ஷ் விஹார் போலீசார், கொலை வழக்கு பதிவு செய்து சேத்தன்யா தோமர், பிரதீப் பாட்டி, பவன் பாட்டி மற்றும் பிரமோத் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். மேலும், தேவ் பிரதாப் மற்றும் சுமித் ஆகிய இருவரையும் தேடி வந்தனர்.
இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் போபுராவில் தேவ் பிரதாப்,22, பதுங்கி இருக்கும் தகவல் கிடைத்தது. தனிப்படை போலீசார் போபுரா சென்று, தேவ் பிரதாபை கைது செய்து, அவருடைய காரையும் பறிமுதல் செய்தனர்.

