உறவு பெண்ணை பலாத்காரம் செய்தவர் துாக்கிட்டு தற்கொலை
உறவு பெண்ணை பலாத்காரம் செய்தவர் துாக்கிட்டு தற்கொலை
ADDED : ஜூன் 22, 2025 08:59 PM
பிரோசாபாத்:உ.பி.,யின் பிரோசாபாத் நகரில், உறவுக்கார பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர், ஜாமினில் வெளியே வந்து, துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உத்தர பிரதேசத்தின் ஆக்ரா அருகில் உள்ள பிரோசாபாத் தெற்கு பகுதியை சேர்ந்த சிவம் என்ற தனு, 32, சில நாட்களுக்கு முன், தன் உறவுக்கார பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக, போக்சோ வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த, 17 ம் தேதி நடந்த வழக்கு விசாரணைக்கு ஆஜரானார். சிறையிலிருந்து வெளியே வந்ததில் இருந்து மிகவும் கவலையுடன் காட்சியளித்த அவர், நேற்று முன்தினம் காலையில், அக்பர்பூர் என்ற இடத்தில் இருந்த தன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள அவர் மீது தற்கொலை வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.