பிரதமர் மோடிக்கு கத்தியைக்காட்டி கொலை மிரட்டல் வீடியோ: ஒருவருக்கு "காப்பு"
பிரதமர் மோடிக்கு கத்தியைக்காட்டி கொலை மிரட்டல் வீடியோ: ஒருவருக்கு "காப்பு"
ADDED : மார் 05, 2024 02:46 PM

புதுடில்லி: கத்தியைக் காட்டி வீடியோ எடுத்து பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த, கர்நாடகாவை சேர்ந்த முகமது ரசூல் என்பவரை போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் யாத்கிரி மாவட்டம் ரங்கம் பேட்டையை சேர்ந்த முகமது ரசூல் என்பவர், 'வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் பிரதமர் மோடி மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கொல்வேன்' என மிரட்டல் விடுத்து சமூகவலைதளத்தில் வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, கர்நாடகாவை சேர்ந்த ரசூல் என்பவர் மீது சூர்பூர் போலீசார் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 505 (1) (பி), 25 (1) (பி) மற்றும் ஆயுதச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த முகமது ரசூலை போலீசார் கைது செய்தனர். போலீசார் விசாரணையில் முகமது ரசூல் ஹைதராபாத்தில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்தது தெரியவந்துள்ளது.

