ADDED : டிச 31, 2024 05:15 PM

இம்பால்: 'மாநிலத்தில் நடந்து வரும் வன்முறைகளுக்கு மக்களிடம் மன்னிப்பு கோருவதாக, மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.
இம்பாலில் அவர் கூறியதாவது:
கடந்த ஆண்டு மே மாதம் முதல் நடைபெற்று வரும் வன்முறைகளுக்கு மாநில மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வரும் ஆங்கில புத்தாண்டில் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக பாடுபடுவோம். அதே வேளையில் கடந்த காலத்தை மன்னிக்கவும் மறந்துவிடவும் அனைத்து தரப்பு மக்களிடமும் கேட்டுக்கொள்கிறேன்.
மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தொடர்பாக, பயோமெட்ரிக் பதிவு செயல்முறை நடந்து வருகிறது. ஜனவரி 2025 முதல்,
சட்டவிரோத மக்கள் தொகைப் பெருக்கத்தைத் தடுக்க, ஆதார் இணைக்கப்பட்ட பிறப்புப் பதிவு அறிமுகப்படுத்தப்படும்.
முதல் கட்டமாக, இந்த முயற்சி மூன்று மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு அடுத்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி தொடங்கப்படும். மணிப்பூரின் சில மாவட்டங்களில் வாக்காளர் பட்டியலில் மக்கள் தொகை அதிகரித்ததைக் கண்டறிந்துள்ளோம். இதன் காரணமாக,பிறப்புப் பதிவு கட்டாயமாக்கப்படும். மேலும் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் புதுப்பிப்புகள் அவசியமாகிறது.
வன்முறை தொடங்கியதில் இருந்து, கொள்ளையடிக்கப்பட்ட 6,000 ஆயுதங்களில், 3,000 க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.இவ்வாறு பிரேன் சிங் கூறினார்.