ADDED : மார் 13, 2024 12:32 AM
புதுடில்லி:டில்லி அரசின் 2021 -2022ம் ஆண்டின் மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. துணைநிலை கவர்னர் சக்சேனா உத்தரவின்படி சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை வழக்குப் பதிவு செய்து விசாரித்தன.
கடந்த ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி சி.பி.ஐ.,யும், மார்ச் 9ம் தேதியும் அமலாக்கத் துறையும் மணீஷ் சிசோடியாவை கைது செய்தன.
டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் தாக்கல் செய்த ஜாமின் மனு விசாரணையில் உள்ளது.
நீதிமன்றக் காவல் முடிவடைந்த நிலையில் டில்லி சிறப்பி நீதிமன்றத்தில் சிசோடியா நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை முக்கியமான கட்டத்தில் இருப்பதால், ஜாமினில் விடுவித்தால் விசாரணைக்கு இடையூறு ஏற்படலாம் என சி.பி.ஐ., வழக்கறிஞர் வாதிட்டார்.
இதையடுத்து, மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவலை 22ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி எம்.கே.நாக்பால் உத்தரவிட்டார்.

