தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ மானசரோவர் யாத்திரை விரைவில் துவக்கம்

மானசரோவர் யாத்திரை விரைவில் துவக்கம்

மானசரோவர் யாத்திரை விரைவில் துவக்கம்


ADDED : ஏப் 18, 2025 01:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 18, 2025 01:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி ;சீனா உடனான சுமுக உறவு காரணமாக, கைலாஷ் - மானசரோவர் யாத்திரை, 5 ஆண்டுகளுக்கு பின் விரைவில் துவங்குகிறது.

கைலாஷ் - மானசரோவர் யாத்திரை கடைசியாக, 2019-ல் நடந்தது. அதன்பிறகு, கொரோனா மற்றும் 2020-ல் லடாக் எல்லையில் சீன ராணுவத்துடன் நடந்த மோதல் உள்ளிட்ட காரணங்களால் நிறுத்தப்பட்டது.

மானசரோவர் ஏரி, சீனாவின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட திபெத்தில் இருப்பதே இதற்கு காரணம். கடந்த அக்டோபரில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின், இந்திய - சீன எல்லையில் ராணுவத்தை திரும்பப் பெற இருதரப்பும் ஒப்புக் கொண்டன.

இதன் தொடர்ச்சியாக, கைலாஷ் - மானசரோவர் யாத்திரையை இந்த ஆண்டு மீண்டும் துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து நம் வெளியுறவு துறையின் செய்தி தொடர்பாளர் ரன்திர் ஜெய்ஸ்வால் நேற்று கூறுகையில், ''இந்தியா - -சீனா இடையே விமான சேவையை மீண்டும் துவங்க கொள்கையளவில் ஒப்புக்கொள்ளப்பட்டு அதற்கான வழிமுறைகள் உருவாக்கப்படுகின்றன.

''மேலும் இரு தரப்பு உறவுகளை மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, கைலாஷ் - மானசரோவர் யாத்திரையை மீண்டும் துவங்குவது குறித்தும் இரு நாடுகளும் பரிசீலித்து வருகின்றன. எனவே, கைலாஷ் - மானசரோவர் யாத்திரை விரைவில் துவங்கப்பட வாய்ப்புள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us