ஒட்டுமொத்தமாக சரணடைய தயார்: 3 மாநில முதல்வர்களுக்கு மாவோயிஸ்டுகள் கடிதம்
ஒட்டுமொத்தமாக சரணடைய தயார்: 3 மாநில முதல்வர்களுக்கு மாவோயிஸ்டுகள் கடிதம்
ADDED : நவ 24, 2025 03:36 PM

ராய்ப்பூர்: ஒட்டு மொத்தமாக சரணடைய தயாராக இருக்கிறோம் என்று கூறி மாவோயிஸ்டுகள் மூன்று மாநில முதல்வர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.
மத்திய அரசு வரும் ஆண்டு ( 2026) மார்ச்சுக்குள் மாவோயிஸ்டுகளை ஒழித்துவிடுவோம் என்று கூறி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, மாவோயிஸ்டு படையினர் மீதான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏராளமான பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
சரணடைதலும் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் தற்போது மாவோயிஸ்டுகள் சார்பில் மூன்று மாநில முதல்வர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அனைவரும் ஆயுதங்களை கீழே போட்டு சரணடைய விரும்புவதாக அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநில முதல்வர்களுக்கு மாவோயிஸ்டுகள் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
நாங்கள் ஹாதியாவை விட்டு வெளியேறி அரசாங்கத்தின் மறுவாழ்வு திட்டத்தை ஏற்றுக்கொள்ள விரும்புகிறோம், ஆகையால்,மூன்று மாநில அரசுகளும் எங்களுக்கு உரிய அவகாசம் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மாவோயிஸ்ட் அமைப்பில் இன்னும் உறுப்பினராக இருப்பவர்களை தொடர்புகொண்டு எங்கள் வழிமுறையின்படி இந்த செய்தியை அவர்களுக்குத் தெரிவிக்க எங்களுக்கு நேரம் தேவை. எனவே, பிப்ரவரி 15, 2026 வரை கால அவகாசம் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

