மார்ச் 23ல் ஐ.பி.எல். தொடர் ஆரம்பம்! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மார்ச் 23ல் ஐ.பி.எல். தொடர் ஆரம்பம்! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ADDED : ஜன 12, 2025 06:02 PM

மும்பை: ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடர் மார்ச் 23ல் தொடங்குவதாக பி.சி.சி.ஐ., அறிவித்துள்ளது.
கிரிக்கெட் ரசிகர்களின் ஏகபோக விளையாட்டு விருந்தாக கருதப்படுவது ஐ.பி.எல்., போட்டிகள். உள்ளூர் கிரிக்கெட் கதாநாயகர்கள், இந்திய மற்றும் வெளிநாட்டு அணிகளின் ஸ்டார் வீரர்கள் என அணிகளில் சரிவிகித கலவையும், ஆரவாரமுமே அதற்கு காரணம்.
இதுவரை 17 ஐ.பி.எல்., சீசன்கள் நடத்தப்பட்டு உள்ளன. இந்தாண்டு 18வது சீசன் நடக்க உள்ளது.
இந் நிலையில் நடப்பாண்டுக்கான ஐ.பி.எல்.,தொடர் மார்ச் 23ம் தேதி தொடங்குவதாக பி.சி.சி.ஐ., துணைத்தலைவர் ராஜிவ் சுக்லா கூறி உள்ளார். மும்பையில் பி.சி.சி.ஐ., சிறப்பு பொதுக்கூட்டம் இன்று (ஜன.12) நடந்தது.
கூட்டத்துக்கு பின்னர் ராஜிவ் சுக்லா நிருபர்களிடம் கூறியதாவது:
சிறப்பு பொதுக் கூட்டத்தில் பி.சி.சி.ஐ.,யின் புதிய பொருளாளராக பிரபதேஜ் சிங் பாட்டியா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இது ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவு. இந்தியன் பிரிமியர் லீக் அல்லது உலக பிரிமியர் லீக் பற்றியோ எதுவும் பேசப்படவில்லை. தற்போதைய அறிவிப்பு என்னவென்றால் மார்ச் 23ம் தேதி ஐ.பி.எல்., தொடங்குகிறது. இறுதிப்போட்டி மே 25ம் தேதி நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.