எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 8 பேர் படுகாயம்
எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 8 பேர் படுகாயம்
ADDED : செப் 30, 2026 08:53 PM
மங்களூரு: கர்நாடகாவின், தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரில் உள்ள ரசாயன ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில், 8 தொழிலாளர்கள் தீக்காயம் அடைந்தனர். இந்த ஆலையிலிருந்து வெளியான வெடிசத்தம், 4 கி.மீ., தொலைவில் உள்ள வீடுகளில் அதிர்வை ஏற்படுத்தியது.
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நகரின் அருகில் கட்டிபல்லா என்ற இடத்தில், ‘மங்களூர் ரிபைனரி மற்றும் பெட்ரோ கெமிக்கல் லிமிடெட்’ என்ற தொழிற்சாலை அமைந்து உள்ளது. இது, மத்திய அரசின் கீழ் இயங்கும் பொதுத்துறை எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம்.
இந்த தொழிற்சாலையில் கச்சா எண்ணெயில் இருந்து பெட்ரோல், டீசல், எல்.பி.ஜி., சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய், விமான எரிபொருள் மற்றும் பல்வேற பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த தொழிற்சாலையின் சி.எச்.டி., எனும், ‘ஹைட்ரோ சல்பர்’ சுத்திகரிப்பு பிரிவில், நேற்று மதியம் 12:15 மணிக்கு பெரிய வெடி விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
எனினும், எட்டு தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த வெடிவிபத்து சத்தம் எட்டு முதல் 10 கி.மீ., தொலை வரை கேட்டுள்ளது. அங்குள்ள கட்டடங்கள் அதிர்ந்ததுடன், கண்ணாடி ஜன்னல்கள் நொறுங்கின. சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளன.
––––––––––––––––––––––
30 09 2026 4 Mangalore Arranged
மங்களூர் ரீபைனரி மற்றும் பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்தில் இருந்து கிளம்பிய புகை.
