sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 கோவாவில் இரவு விடுதியில் பயங்கர தீ விபத்து: சுற்றுலா பயணியர் உட்பட 25 பேர் பலி

/

 கோவாவில் இரவு விடுதியில் பயங்கர தீ விபத்து: சுற்றுலா பயணியர் உட்பட 25 பேர் பலி

 கோவாவில் இரவு விடுதியில் பயங்கர தீ விபத்து: சுற்றுலா பயணியர் உட்பட 25 பேர் பலி

 கோவாவில் இரவு விடுதியில் பயங்கர தீ விபத்து: சுற்றுலா பயணியர் உட்பட 25 பேர் பலி


UPDATED : டிச 08, 2025 07:37 AM

ADDED : டிச 08, 2025 12:18 AM

Google News

UPDATED : டிச 08, 2025 07:37 AM ADDED : டிச 08, 2025 12:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பணஜி:கோவாவில் இரவு விடுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், சுற்றுலா பயணியர் உட்பட 25 பேர் பலியாகினர்.

கோவாவின் வடக்கு பகுதியில் உள்ள பாகா கடற்கரை பகுதியில், 'பிர்ச் பை ரோமியோ லேன்' என்ற இரவு விடுதி செயல்பட்டு வருகிறது. தலைநகர் பணஜியில் இருந்து, 25 கி.மீ., தொலைவில் அர்போரா நதிக்கரையை ஒட்டியுள்ள இந்த விடுதி, ஓராண்டுக்கு முன் துவக்கப்பட்டது.

வார இறுதி என்பதால், இந்த விடுதியில் சுற்றுலா பயணியர் உட்பட ஏராளமானோர் நேற்று முன் தினம் இரவு குவிந்தனர்.

அதிர்ச்சி



விடுதிக்கு வந்திருந்த 100க்கும் மேற்பட்டோர் முதல் தளத்தில் நடனமாடி கொண்டிருந்தனர். அப்போது, அங்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தீ மளமளவென பரவியதை அடுத்து, அங்கிருந்த சிலர், கீழ் தளத்தில் உள்ள சமையலறைக்கு விரைந்தனர்.

தீ விபத்தால், கேளிக்கை விடுதி முழுதும் புகை மண்டலமானது. சாலை குறுகியதாக இருந்ததால், சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வாகனங்களால் விடுதியை நெருங்க முடியவில்லை.

விடுதியில் இருந்து 400 மீ., தொலைவிலேயே வாகனங்கள் நிறுத்தப்பட்டு, தீயணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின், தீ கட்டுக்குள் வந்தது. இந்த சம்பவத்தில் உடல் கருகியும், மூச்சு திணறியும் 25 பேர் பலியாகினர்; ஆறு பேர் படுகாயம் அடைந்தனர்.

இறந்தவர்களில் ஐந்து பேர் வாடிக்கையாளர்கள் என்றும், 20 பேர் விடுதி ஊழியர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இறந்தவர்களின் உடல்கள், கோவா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

உயிர் தப்பிய தெலுங்கானாவின் ஹைதராபாதைச் சேர்ந்த சுற்றுலா பயணி பாத்திமா ஷேக் கூறுகையில், ''முதல் தளத்தில், 100க்கும் மேற்பட்டோர் நடனமாடி கொண்டிருந்தோம். அவர்களை உற்சாகப்படுத்த பட்டாசுகள் கொளுத்தப்பட்டன. இதையடுத்து, அங்கு தீ விபத்து ஏற்பட்டது. பனை ஓலைகளால் விடுதி கட்டப்பட்டிருந்ததால், பிற இடங்களில் தீ வேகமாக பரவியது.

மயங்கினர்



''இதனால், அலறியபடி சிலர் தரை தளத்துக்கு வந்தனர். வெளியேறும் வாசல் குறுகலாக இருந்ததால், அனைவரும் அங்கிருந்த சமையலறையில் குவிந்தனர். புகை அதிகமாக இருந்ததால், பலர் மயங்கினர். முதலில் வெளியேறியதால், நானும், என் நண்பர்களும் உயிர் தப்பினோம். அவசர காலங்களில் வெளியேற கூட, விடுதியில் வழியில்லை. இந்த விபத்துக்கு விடுதி நிர்வாகமே பொறுப்பு,'' என்றார்.

இந்நிலையில், விதிகளை மீறி கேளிக்கை விடுதி இயங்கி வந்தது தெரிய வந்துள்ளது.

இது குறித்து, அர்போரா - நாகோ பஞ்சாயத்து தலைவர் ரோஷன் ரேத்கர் கூறியதாவது:

விபத்து நடந்த இரவு விடுதியை சவுரப் லுத்ரா என்பவர் நடத்தி வந்தார். அவருக்கும், பங்குதாரர் கவுரவுக்கும் இடையே விடுதியை நடத்துவதில் பிரச்னை ஏற்பட்டது. இது தொடர்பாக எங்களிடம் முறையிட்டனர்.

அப்போது, விடுதியை ஆய்வு செய்த நாங்கள், விதிமீறல் இருப்பதாக கூறி இடிக்க வலியுறுத்தினோம்; இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தெரியப் படுத்தினோம்.

ஆனால், லஞ்சம் பெற்ற அதிகாரிகள், விடுதியை தொடர்ந்து இயங்க அனுமதித்துள்ளனர். இதுவே, இந்த விபத்துக்கு காரணம். இவ்வாறு அவர் கூறினார்.

காஸ் சிலிண்டர் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறிய போலீசார், விடுதிக்கு 'சீல்' வைத்தனர். அதன் உரிமையாளர்களான சவுரப் லுத்ரா, கவுரவ் லுத்ரா, விடுதி மேலாளர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்டோர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதில், விடுதி மேலாளர், விடுதி நடத்த அனுமதி வழங்கிய பஞ்சாயத்து தலைவர் ரோஷன் ரேத்கர் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், தப்பியோடிய உரிமையாளர்களுக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சம்பவ இடத்துக்கு உடனடியாக சென்ற முதல்வர் பிரமோத் சாவந்த், விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து அதிகாரிகளிடம் விசாரித்தார்.

விதிமீறல்



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''கோவாவின் சுற்றுலா வரலாற்றில் முதன்முறையாக இது போன்ற சம்பவம் நடந்துள்ளது. விதிகளை மீறி கேளிக்கை விடுதி இயங்கியதாக புகார் வந்துள்ளது.

''இந்த விவகாரத்தில் தொடர்புடைய விடுதி உரிமையாளர், அனுமதி வழங்கிய அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விபத்து குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,'' என்றார்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

'பிரதமர் நிவாரண நிதியில் இருந்து இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா, 2 லட்சம் ரூபாயும்; காயமடைந்தவர்களுக்கு, 50,000 ரூபாயும் வழங்கப்படும்' என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us