sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சுவாமியே சரணம் ஐயப்பா-22: தினம் ஒரு தகவல்: ஆதாரம் நீ தானய்யா

/

சுவாமியே சரணம் ஐயப்பா-22: தினம் ஒரு தகவல்: ஆதாரம் நீ தானய்யா

சுவாமியே சரணம் ஐயப்பா-22: தினம் ஒரு தகவல்: ஆதாரம் நீ தானய்யா

சுவாமியே சரணம் ஐயப்பா-22: தினம் ஒரு தகவல்: ஆதாரம் நீ தானய்யா


ADDED : டிச 08, 2025 12:22 AM

Google News

ADDED : டிச 08, 2025 12:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நம் உடலில் மூலாதாரம்,சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞா, சஹஸ்ராரம் ஆகிய ஆதாரங்கள் உள்ளன.

உடல், மனம், ஆன்மாவிற்கு முக்கியமான இந்த சக்கரங்களை குறிக்கும் விதத்தில் ஏழு சாஸ்தா கோயில்கள் உள்ளன. அவை பற்றி காண்போம்.

மூலாதாரம்: முதுகெலும்பின் அடிப்பகுதியில் உள்ளது. உயிர் இருக்கும் இடம் இதுவே. வாழ்க்கை இதில் இருந்தே தொடங்குகிறது. பாபநாசம் காரையாறு சொரிமுத்தய்யன் கோயில். இதை முதல் சாஸ்தா கோயில் என்பர்.

முன்வினை பாவத்தை போக்க சபரி யாத்திரையை இங்கிருந்தே தொடங்குவர்.

சுவாதிஷ்டானம்: வயிற்றின் அடிப்பகுதியில் உள்ளது. இன்பம், உணர்ச்சி, ஆனந்த சக்தியின் இருப்பிடம். இதுவே கலை, இசை, படைப்பாற்றலின் மையம். அச்சன்கோவிலில் பூரணை, புஷ்கலையுடன் தர்ம சாஸ்தா மகிழ்ச்சியுடன் அருள்புரிகிறார்.

மணிபூரகம்: வயிற்றின் நடுப்பகுதியில் உள்ளது. ஆற்றல், வீரம், மனவலிமையின் பிறப்பிடம்.

ஆரியங்காவு - களரி, வாள், வில் ஆகிய வீர சின்னங்களோடு இங்கு சாஸ்தா இருப்பதால் 'வீரசாஸ்தா' எனப்படுகிறார்.

அனாகதம்: இதயப் பகுதியில் உள்ளது. அன்பு, கருணை, பக்தி வெளிப்படும் இடம். குளத்துபுழை - இயற்கை எழில் கொஞ்ச பசுமையான காட்டில் அன்பு, கருணை கொண்டவராக சாஸ்தா இங்கு இருக்கிறார்.

விசுத்தி: தொண்டைப் பகுதியில் உள்ளது. குரல், இசை, சங்கீதம், ஜபம் இங்கிருந்தே தோன்றும்.

எருமேலி - பேட்டை துள்ளல், அபர்ண சங்கீதம் போன்ற பக்தி வெளிப்பாடு இங்கு நடைபெறும்.

ஆக்ஞா: புருவங்களுக்கு இடையே உள்ளது. மூன்றாவது கண், ஞானம், ஆன்மிக சிந்தனை உருவாகும் இடம். சபரிமலை - நீயே கடவுள் என்ற ஞானத்தை வழங்கி உண்மையை ஐயப்பன் உணர வைக்கிறார்.

சஹஸ்ராரம்: தலையின் உச்சியில் உள்ளது. ஜீவாத்மாவாகிய நாம் ஒளி வடிவில் பரமாத்வாவை பார்க்கும் இடம் இது. காந்தமலை - காந்தமலை பொன்னம்பல மேட்டில் மகரஜோதியை பார்க்கலாம். அதாவது ஐயப்பனை ஒளி வடிவில் தரிசிக்கும் இடம்.






      Dinamalar
      Follow us