பயிற்சி மையங்களுக்கு 'சீல்' முதல்வரை சந்திக்க மேயர் திட்டம்
பயிற்சி மையங்களுக்கு 'சீல்' முதல்வரை சந்திக்க மேயர் திட்டம்
ADDED : அக் 10, 2024 10:48 PM
பகர்கஞ்ச்:'சீல்' வைக்கப்பட்ட பயிற்சி மையங்களின் உரிமையாளர்கள் கவலை தெரிவித்ததையடுத்து, முதல்வர் ஆதிஷியை சந்திக்க டில்லி மேயர் ஓபராய் ஷெல்லி திட்டமிட்டுள்ளார்.
பழைய ராஜேந்தர் நகரில் மழை வெள்ளத்தில் சிக்கி மூன்று பயிற்சி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.
விதிகளை மீறி இயங்கும் பயிற்சி மையங்களுக்கு சீல் வைப்பது தொடர்பான பிரச்னைகள் குறித்து உயர்மட்டக் கூட்டத்தை மேயர் ஓபராய் ஷெல்லி நடத்தினார்.
கூட்டத்தில் எம்.எல்.ஏ.,க்கள் துர்கேஷ் பதக், திலீப் பாண்டே, கூடுதல் கமிஷனர் ஜிதேந்தர் யாதவ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பல்வேறு பயிற்சி மையங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
மேயர் பேசுகையில், “முதல்வர், தீயணைப்புத் துறை, மாநகராட்சி அதிகாரிகளுடன் விரைவில் கூட்டம் நடத்தப்படும்,” என, பயிற்சி மைய உரிமையாளர்களுக்கு உறுதியளித்தார்.