ADDED : ஜன 25, 2026 06:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லுாதியானா: பஞ்சாப் பல்கலையில் எம்.பி.ஏ., படித்த மாணவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தவரை போலீசார் தேடுகின்றனர்.
பஞ்சாப் பல்கலையின் லுாதியானா பிராந்திய மையத்தில், எம்.பி.ஏ., படித்துக் கொண்டிருந்தவர் ராஜ்வீர் சிங் கைரா,25. நேற்று முன் தினம் மாலை தல்வாரா துப்பாக்கிச் சுடும் தளத்துக்கு, ராஜ்வீர் சிங் மற்றும் அவரது நண்பர் ஜுகாட் சிங்,27, ஆகிய இருவரும் சென்றனர். அங்கு,
ஜூகாட் சிங் தன்னிடம் இருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியால், ராஜ்வீராவை சுட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ராஜ்வீர் சிங், சிகிச்சை பல னின்றி இறந்தார். இதுகுறித்து, கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், ஜுகாட் சிங்கை தேடுகின்றனர்.

