607 துப்புரவுத் தொழிலாளர்கள் பணியை முறைப்படுத்தியது எம்.சி.டி.,
607 துப்புரவுத் தொழிலாளர்கள் பணியை முறைப்படுத்தியது எம்.சி.டி.,
ADDED : அக் 17, 2024 09:36 PM
இந்திரபிரஸ்தா:சட்டசபை தேர்தலுக்கு முன்பாக 607 துப்புரவுத் தொழிலாளர்களின் பணியை எம்.சி.டி., எனும் டில்லி மாநகராட்சி முறைப்படுத்தியுள்ளது.
மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் ஆம் ஆத்மி, டில்லி மாநகராட்சியிலும் ஆட்சி வகிக்கிறது. வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலை கவுரவப் பிரச்னையாக ஆம் ஆத்மி கருதுகிறது.
இந்தத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டுமென அக்கட்சித் தலைவர்கள் விரும்புகின்றனர். இதற்காக பல்வேறு திட்டங்களை அறிவிக்க ஆம் ஆத்மி அரசும் மாநகராட்சி நிர்வாகமும் தயாராகி வருகின்றன.
இதன் ஒருபகுதியாக ஒப்பந்த அடிப்படையில் மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்து வரும் 607 பேரின் பணியை முறைப்படுத்த எம்.சி.டி., முடிவு செய்தது.
இவர்களுக்கான பணியை நிரந்தரம் செய்வதுடன் அவர்களின் தகுதிக்கேற்ற வேலையை வழங்க மாநகராட்சி முன்வந்தது. இவர்களுக்கு தகுந்த பணியை வழங்குவதற்கான விழா நேற்று முன்தினம் நடந்தது.
விழாவில் முதல்வர் ஆதிஷி கலந்து கொண்டு, பணியாளர்களுக்கு பணி ஆணையை வழங்கினார்.