ADDED : செப் 21, 2024 06:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: அக்டோபர் 6ம் தேதி சென்னை மெரினாவில், மெகா ஏர் ஷோ நடைபெறுகிறது என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இந்திய விமானப்படை தின விழா அக்டோபர் 8 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னை மெரினாவில் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை இந்திய விமானப்படை செய்து வருகிறது.
இந்த ஆண்டு நிகழ்வு 'பாரதிய வாயு சேனா -- சக்ஷம், சஷக்த், ஆத்மநிர்பர்' (சக்தி, சக்தி வாய்ந்த மற்றும் தன்னம்பிக்கை) என்ற கருப்பொருளின் அடிப்படையில் அமைந்துள்ளது. நாட்டின் வான்வெளியைப் பாதுகாப்பதில் விமான படையின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை இந்த தீம் எடுத்துக்காட்டுகிறது.