ADDED : பிப் 11, 2025 06:36 AM

எதிர்க்கட்சி தலைவர் அசோக், பெங்களூரில் அளித்த பேட்டி:
பெட்ரோல், டீசல், பால் விலை, பஸ் பயண கட்டணம் உயர்த்தப்பட்டதால், மக்கள் பரிதவிக்கின்றனர். இச்சூழ்நிலையில், மெட்ரோ ரயில் பயண கட்டணத்தை, திடீரென 46 சதவீதம் வரை உயர்த்தி, மக்களின் காயத்தின் மீது சூடு போட்டுள்ளனர்.
மெட்ரோ ரயிலில் மக்கள் பயணிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மெட்ரோ பயணத்தை விட, சொந்த ஸ்கூட்டர், பைக்கில் பயணிப்பதே மேல் என, தோன்றுகிறது. பொது வாகனங்களின் போக்குவரத்தை ஊக்கப்படுத்தி, பெங்களூரின் போக்குவரத்து நெருக்கடி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
விலை உயர்வால் அவதிப்படும் பெங்களூரு மக்களுக்கு, காங்கிரஸ் அரசு 'ஷாக்' கொடுத்துள்ளது. மக்களின் உயிர்நாடியான மெட்ரோ பயண கட்டணத்தை உயர்த்தியது சரியில்லை. பொய்யான வாக்குறுதிகளை அளித்து, ஆட்சிக்கு வந்து, மக்களிடம் கொள்ளை அடிக்கும் காங்கிரசுக்கு, டில்லி மக்கள் பதிலடி கொடுத்ததை போன்று, வரும் நாட்களில் கர்நாடக மக்களும் பாடம் புகட்டுவர். மெட்ரோ பயண கட்டண உயர்வை, உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.