sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

எம்.ஜி., ரோடு - இந்திராநகர் மெட்ரோ ரயில் இன்று 2 மணி நேரம் 'ஸ்டாப்'

/

எம்.ஜி., ரோடு - இந்திராநகர் மெட்ரோ ரயில் இன்று 2 மணி நேரம் 'ஸ்டாப்'

எம்.ஜி., ரோடு - இந்திராநகர் மெட்ரோ ரயில் இன்று 2 மணி நேரம் 'ஸ்டாப்'

எம்.ஜி., ரோடு - இந்திராநகர் மெட்ரோ ரயில் இன்று 2 மணி நேரம் 'ஸ்டாப்'


ADDED : பிப் 10, 2024 11:59 PM

Google News

ADDED : பிப் 10, 2024 11:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : பராமரிப்பு பணி காரணமாக, எம்.ஜி., ரோடு - இந்திராநகர் மெட்ரோ ரயில் சேவை, இன்று இரண்டு மணி நேரம் நிறுத்தப்படுகிறது.

பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, மெட்ரோ ரயில்கள் பெரும் உதவியாக உள்ளன. ஒயிட்பீல்டு - செல்லகட்டா; நாகசந்திரா - சில்க் இன்ஸ்டிடியுட் இடையில், மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் ஆறு லட்சம் பயணியர், பயணம் செய்கின்றனர்.

இந்நிலையில் பராமரிப்பு பணியால், ஒயிட்பீல்டு - செல்லகட்டா பாதையில், எம்.ஜி.ரோடு முதல் இந்திராநகர் வரை, இன்று காலை 7:00 மணி முதல் 9:00 மணி வரை, இரண்டு மணி நேரம், ரயில் சேவை நிறுத்தப்பட்டு உள்ளது.

ஒயிட்பீல்டு செல்லும் ரயில்கள், இந்திராநகரில் இருந்தும்; செல்லகட்டா செல்லும் ரயில்கள் எம்.ஜி., ரோட்டில் இருந்தும் இயக்கப்படும். இன்று வார இறுதி நாள் என்பதால், பயணியர் கூட்ட நெரிசல் அவ்வளவாக இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us