எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா தங்கவயலில் கொண்டாட்டம்
எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா தங்கவயலில் கொண்டாட்டம்
ADDED : ஜன 17, 2025 11:09 PM

தங்கவயல்: தங்கவயல் நகர அ.தி.மு.க.,வும், அண்ணா தொழிற்சங்கப் பேரவையும் தனித்தனியாக தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழாவை நேற்று கொண்டாடினர்.
அ.தி.மு.க.,
ராபர்ட்சன்பேட்டை காந்தி சதுக்கத்தில் எம்.ஜி.ஆர்., படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. நகர செயலர் பொன் சந்திரசேகர், வக்கீல்கள் பிரிவு செயலர் ஜெகநாதன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராஜசேகர், வி.சி.நடராஜ், சீனிவாசன், பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து ஆண்டர்சன்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினர்.
பேரவை
இதன் மாநில செயலர் மு.அன்பு தலைமையில் கோரமண்டல் ஓரியண்டல் வட்டத்தில் உள்ள அலுவலகத்தில் எம்.ஜி.ஆர்., படத்திற்கு மாலை அணிவித்து, பூஜைகள் செய்து இனிப்புகள் வழங்கினர்.
ஆண்டர்சன்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்தனர். வி.விஜயன், பழக்கடை கதிரவன், அசோக் குமார், ஜெயராமன், தீர்த்த பாணி, சகாயம் உட்பட பலர் பங்கேற்றனர்.
***
தங்கவயல் பட விளக்கம்
18 1 2025 kgf 1
தங்கவயல் நகர அ.தி.மு.க., சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழாவை கொண்டாடினர். இடம்: ராபர்ட்சன் பேட்டை.
18 1 2025 kgf 2
அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் எம். ஜி.ஆர்., பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சிலைக்கு மாலை அணிவித்தனர்.