சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு பா.ஜ., மீது அமைச்சர் புகார்
சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு பா.ஜ., மீது அமைச்சர் புகார்
ADDED : நவ 09, 2024 09:18 PM
புதுடில்லி:“தலைநகர் டில்லியில் பா.ஜ.,வுக்கு 7 எம்.பி.,க்கள் இருந்தும் மாநகரின் சட்டம் - ஒழுங்கு விவகாரத்தில் யாரும் கண்டுகொள்வதில்லை,”என, அமைச்சர் சவுரவ் பரத்வாஜ் கூறினார்.
வடகிழக்கு டில்லியில் நேற்று அதிகாலை 10 நிமிடங்களில் இரண்டு இடங்களில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
இந்த சம்பவம் குறித்து, டில்லி உள்துறை அமைச்சர் சவுரவ் பரத்வாஜ் கூறியதாவது:
தலைநகர் டில்லியில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. ஆனால், டில்லியில் உள்ள 7 பா.ஜ., - எம்.பி.,க்களும் இதைக் கண்டுகொள்வதில்லை. தங்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்றுதான் நினைக்கின்றனர். போலீஸ் துறையை கவனிக்கும் துணைநிலை கவர்னரும் அமைதியாக இருக்கிறார்.
டில்லி மாநகரில் சட்டம் ஒழுங்கை மேம்படுத்த எந்தத் திட்டமும் கவர்னரிடமும் இல்லை. எம்.பி.,க்களிடமும் இல்லை. நாட்டின் தலைநகரில் பொது மக்களும் வணிகர்களும் அச்சத்துடனே வசிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.