ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்: ராகுல் மீது மத்திய அரசு குற்றச்சாட்டு
ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்: ராகுல் மீது மத்திய அரசு குற்றச்சாட்டு
ADDED : ஆக 01, 2025 04:38 PM

புதுடில்லி; அரசியலமைப்புகளை அச்சுறுத்துவது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பதிலடி தந்துள்ளார்.
தேர்தல் ஆணையம் மீது ராகுல் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து அவர் மேலும் கூறியதாவது;
அரசியல் சட்ட அங்கீகாரம் கொண்ட அமைப்புகளை ராகுல் அச்சுறுத்துவது இது முதல் முறை அல்ல. இது ஜனநாயகத்தை பலவீனப்படுத்த ஒரு பெரிய சதி. மிகவும் ஆபத்தான நடத்தை மற்றும் அணுகுமுறை ஆகும்.
அரசியலமைப்பை இழிவுபடுத்த எதிர்க்கட்சி ஒரு தீங்கிழைக்கும் திட்டத்தை நடத்தி வருகிறது. இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட ராகுலை உள்நாட்டில் எதிர்க்க தொடங்கி உள்ளனர். அவர் (ராகுல்) ஒரு மோசமான நாடகத்தை விளையாடுகிறார், நாட்டின் பிம்பத்தை அழிக்க விரும்புகிறார் என மக்கள் சொல்லத் தொடங்கியுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

