உத்தரவாத திட்டங்கள் நீடிக்கும் அமைச்சர் எம்.பி.பாட்டீல் உறுதி
உத்தரவாத திட்டங்கள் நீடிக்கும் அமைச்சர் எம்.பி.பாட்டீல் உறுதி
ADDED : பிப் 01, 2024 07:17 AM

பெங்களூரு: ''காங்கிரஸ் ஆட்சி யில் உள்ள, ஐந்து ஆண்டுகளும் உத்தரவாத திட்டங்கள் நீடிக்கும். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம்,'' என கனரக, நடுத்தர தொழிற் துறை அமைச்சர்எம்.பி.பாட்டீல்தெரிவித்தார்.
இது குறித்து, பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:
லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் 15 முதல் 20 தொகுதிகளில் வெற்றி பெறும்.
தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை. லோக்சபா தேர்தலில் தோற்றால், உத்தரவாத திட்டங்கள் ரத்தாகும் என, எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா என்ன அர்த்தத்தில் கூறினார் என்பது தெரியவில்லை.
காங்கிரஸ் ஆட்சியில் உள்ள, ஐந்து ஆண்டுகளும் உத்தரவாத திட்டங்கள் நீடிக்கும். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.
பா.ஜ.,வினர்அரசியல் பருப்பை வேக வைத்துக்கொள்ள, மத கலவரத்தை உருவாக்கி, அமைதியை குலைக்க முயற்சிக்கின்றனர்.
ஓட்டுகளுக்காக மக்களின் வாழ்க்கையோடு விளையாடுவது நல்லதல்ல.
இதற்கு முன் கடலோர பகுதிகளில் நடந்த கலவரங்கள், இப்போது பழைய மைசூரு பகுதியில் உருவாக்கமுயற்சிக்கிறது.
பா.ஜ., மற்றும் ம.ஜ.த., நடவடிக்கைகளை, மக்கள் கவனிக்கின்றனர்.
லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுடன், கூட்டணி வைத்துள்ள ம.ஜ.த., தலைவர்களும், குமாரசாமியும், சங் பரிவாருக்கு எதிராக பேசியதை நினைவு கூரட்டும்.
ராமன் பெயரை கூற, காங்கிரசார் தயங்க கூடாது. சிறுபான்மையினருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி, ராமனை பற்றிய விஷயத்தை நாம் பேச வேண்டும் என, அமைச்சர் முனியப்பா கூறியதை நானும் ஆமோதிக்கிறேன்.
ராமன் பா.ஜ.,வின் சொத்து அல்ல. நம் அனைவரின் சொத்து. சமத்துவம் எங்களின் சித்தாந்தம்.
இவ்வாறு அவர் கூறினார்.