ADDED : பிப் 17, 2024 11:31 PM

விஜயபுரா, : லோக்சபா தேர்தலில் பாகல்கோட் தொகுதியில் போட்டியிட, 'சீட்' தரும்படி, விருப்ப மனு தாக்கல் செய்து உள்ளதாக, அமைச்சர் சிவானந்த பாட்டீல் மகள் சம்யுக்தா பாட்டீல் கூறி உள்ளார்.
கர்நாடகா ஜவுளி துறை அமைச்சர் சிவானந்தா பாட்டீலின் மகள் சம்யுக்தா பாட்டீல். கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் பாகல்கோட் மாவட்ட பொறுப்பாளராக உள்ளார்.
நேற்று அவர் அளித்த பேட்டி:
லோக்சபா தேர்தலில், பாகல்கோட் தொகுதியில் போட்டியிட ஆசைப்படுகிறேன். இதற்காக விருப்ப மனுவும் தாக்கல் செய்துள்ளேன். கடந்த லோக்சபா தேர்தல், சட்டசபை தேர்தலிலும் 'சீட்' எதிர்பார்த்தேன். ஆனால் கிடைக்கவில்லை.
இம்முறை பாகல்கோட் 'சீட்' கேட்டு, விருப்ப மனுத் தாக்கல் செய்துள்ளேன். பாகல்கோட் முன்பு, அகண்ட விஜயபுராவில் இருந்தது. பாகல்கோட்டில் எங்கள் ஆதரவாளர்கள், நலவிரும்பிகள் உள்ளனர்.
எட்டு ஆண்டுகளாக கட்சிக்காக உழைக்கிறேன். 'சீட்' கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது. வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், சோர்ந்து போக மாட்டேன். கட்சி மேலிட முடிவுக்கு கட்டுப்படுவேன்.
என்னை விட கட்சியில், நீண்ட காலம் பணியாற்றியவர்கள் உள்ளனர் என்று, எனக்கு தெரியும். கட்சிக்காக உழைக்கும் தொழிலாளர்களை, கட்சி மேலிடம் அங்கீகரிக்கும் என்று, நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.