தங்கம் கொள்ளையில் அமைச்சர்களுக்கு தொடர்பு: கேரள பா.ஜ., தலைவர் கருத்து
தங்கம் கொள்ளையில் அமைச்சர்களுக்கு தொடர்பு: கேரள பா.ஜ., தலைவர் கருத்து
ADDED : நவ 25, 2025 02:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சபரிமலை: சபரிமலை தங்கம் கொள்ளையில் கேரள அமைச்சர்களுக்கும் தொடர்புள்ளது என கேரள மாநில பா.ஜ., தலைவர் ராஜீவ் சந்திரசேகர் கூறினார்.
பத்தனந்திட்டையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
சபரிமலைக்கு வரும் பக்தர்களையும், கோயிலையும் பாதுகாக்க மாநில அரசால் முடியவில்லை என பினராயி விஜயன் சொன்னால் நாங்கள் பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்.
சபரிமலை தங்கம் கொள்ளையில் அரசுக்கு தெரியாமல் எதுவும் நடக்கவில்லை. கேரள அமைச்சர்களுக்கும் இதில் தொடர்புள்ளது. அரசியல் கூட்டுச்சதி உள்ளது.
இது பற்றி மத்திய அரசின் ஏஜென்சி மூலம் விசாரணை நடத்த வேண்டும். கடந்த 30 ஆண்டுகளில் சபரிமலையில் நடத்தப்பட்ட ஆடிட் அறிக்கைகள், லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளின் அறிக்கைகள் போன்றவற்றை ஆய்வு செய்ய வேண் டும். இந்த விஷயத்தில் யாரையும் காப்பாற்ற அரசு முயற்சிக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

