ADDED : ஏப் 10, 2025 08:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.கே. புரம்: தென்மேற்கு டில்லியின் முகமதுபூர் கிராமத்தில் உள்ள கோவில் ஒன்றில் இருந்த விலை உயர்ந்த இசை அமைப்பு திருடு போனது. இதுகுறித்து கோவிலின் பூசாரி அங்கித் ஜா, கடந்த 2ம் தேதி போலீசில் புகார் அளித்தார்.
வழக்குப் பதிவு செய்த போலீசார், கோவிலை சுற்றி பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் ஒரு சிறுவனை அடையாளம் கண்டனர்.
ஏற்கனவே குற்றப்பின்னணி கொண்ட அந்த சிறுவன், கோவில் இசை அமைப்பைத் திருடியதை ஒப்புக் கொண்டான். அவன் வீட்டில் இருந்து இசை அமைப்பின் சில பாகங்களை போலீசார் கைப்பற்றினர்.
ஏழாம் வகுப்பு கல்வியை பாதியில் நிறுத்திய சிறுவன், தவறான நட்பால் குற்றங்களில் ஈடுபட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

