தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/3 ஆண்டுகளாக தலைமறைவானவர் அதிரடி கைது

3 ஆண்டுகளாக தலைமறைவானவர் அதிரடி கைது

3 ஆண்டுகளாக தலைமறைவானவர் அதிரடி கைது


UPDATED : நவ 18, 2026 04:16 PM

ADDED : நவ 18, 2026 04:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 18, 2026 04:16 PM ADDED : நவ 18, 2026 04:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: பெண்களை மறைந்திருந்து நோட்டமிட்ட வழக்கில் தேடப்பட்ஐ வந்த 25 வயது வாலிபர், மூன்று ஆண்டுகளுக்கு பின் போலீசிடம் சிக்கினார்.

டில்லியை சேர்ந்த கன்னாட் பிளேஸ் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்திற்கு பின்னாள் இருந்த பொதுகழிப்பறையை ஒரு பெண் பயன்படுத்திய போது, ராஜு தாஸ், 22 என்பவர், அதன் கதவு மீது ஏறி, நோட்டம் விட்டுள்ளார். அந்த பெண் கூச்சலிட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்து தப்பி ஓடி, அருகில் இருந்த ஆண்கள் கழிப்பறைக்குள் புகுந்து கொண்டார். அந்த பெண் தன் கணவரின் உதவியுடன், ராஜு தாஸை பிடித்து, போலீசில் ஒப்படைத்தார். இதையடுத்து, ராஜு தாஸ் மீது, கன்னாட் பிளேஸ் போலீஸ் நிலையத்தில் 2023, செப்., 16ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இருப்பினும் ஜாமினில் வெளிவந்த ராஜு தாஸ், கடந்த மூன்று ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். அவரை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது.

இந்நிலையில், டில்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் போலீசார் நடத்திய தொடர் சோதனைகளுக்குப் பின், நவ., 17ல் ராஜு தாஸ் பிடிபட்டார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us