ADDED : பிப் 16, 2025 11:11 PM

கலப்பு திருமணங்களில் எந்த தவறும் இல்லை, ஆனால் அந்த பெயரில் மோசடி செய்வது தீவிரமான பிரச்னை; அவை கட்டுப்படுத்தப்பட வேண்டும். மஹாராஷ்டிராவில் கலப்பு திருமணம் செய்து குழந்தைகள் பிறந்தவுடன், பெண்களை ஏமாற்றி கைவிடும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
தேவேந்திர பட்னவிஸ், மஹாராஷ்டிரா முதல்வர், பா.ஜ.,
சைக்கிள் பயன்படுத்துங்கள்!
ஒவ்வொருவரும், குறிப்பாக இளைஞர்கள் முடிந்தவரை பயணம் செய்ய சைக்கிள்களை பயன்படுத்த வேண்டும். இது உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, காற்று மாசை குறைத்து நம் சுற்றுச்சூழலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
மன்சுக் மாண்டவியா, மத்திய அமைச்சர், பா.ஜ.,
முதல்வர் மாற்றமில்லை!
சித்தராமையாவை, காங்கிரஸ் இரு முறை கர்நாடகாவின் முதல்வராக்கி உள்ளது. அவர் தான் எங்கள் தலைவர். முதல்வராக சிறப்பாக பணியாற்றி வருகிறார். அவர், ஊடகங்களுக்கு தீனியாக மாறுவதை நான் விரும்பவில்லை. முதல்வர் பதவியில் எந்த மாற்றமும் இல்லை.
சிவகுமார், கர்நாடக துணை முதல்வர், காங்கிரஸ்