பாலியல் வழக்கில் சிக்கிய எம்.எல்.ஏ., ஆஸ்திரேலியாவுக்கு தப்பி ஓட்டம்
பாலியல் வழக்கில் சிக்கிய எம்.எல்.ஏ., ஆஸ்திரேலியாவுக்கு தப்பி ஓட்டம்
ADDED : நவ 09, 2025 10:56 PM

சண்டிகர்: பஞ்சாபில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, தலைமறைவாக இருந்த ஆம் ஆத் மி எம்.எல்.ஏ., ஹர்மித் சிங் பதன்மஜ்ரா, 50, ஆஸ்திரேலியாவுக்கு தப்பியோடி யது தெரியவந்துள்ளது.
பஞ்சாபில் முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில் ஆம் ஆத்மின் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள சனோர் தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ளவர் ஆம் ஆத்மியைச் சேர்ந்த ஹர்மித் சிங் பதன்மஜ்ரா.
மிரட்டல் இவருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், 2021ல் ஜிராக்பூரைச் சேர்ந்த பெண்ணிடம், தனக்கு வி வாகரத்து ஆனதாக ஏமாற்றி, பாலியல் உறவு வைத்து உள்ளார்.
தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அப்பெண், ஹர்மித் சிங்கிடம் முறையிட்டார். இதையடுத்து, அப்பெண்ணை சமாதானப்படுத்தி, திருமணம் செய்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, அப்பெண்ணை ஆபாசமாக திட்டுவது, ஆபாச போட்டோ, வீடியோக்களை அனுப்பி மிரட்டல் விடுப்பது போன்ற செயல்களில் ஹர்மித் சிங் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அதிருப்தி அடைந்த அப்பெண், கடந்த செப்., 1ல், எம்.எல்.ஏ., ஹர்மித் சிங் மீது போலீசில் புகார் அளித்தார்.
இதன்படி பாலியல் பலாத்காரம் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் ஹர்மித் சிங் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, ஹரியானாவின் தாப்ரி பகுதியில் இருந்த அவரைக் கைது செய்ய போலீசார் சென்றனர்.
அப்போது, அவரது ஆதரவாளர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதுடன், துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கிடையே, ஹர்மித் சிங் தப்பியோடி தலை மறைவானார்.
இதைத்தொடர்ந்து, ஹர்மித் சிங்கை தேடப்படும் குற்றவாளி என பாட்டியாலா நீதிமன்றம் அறிவித்தது.
இதுத விர, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., தலைமறைவானதை அடுத்து, பஞ்சாப் போலீசார் சார்பில் அவருக்கு எதிராக, 'லுக் அவுட்' எனப்படும் தேடப்படும் நபர் என்பதற்கான நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
ஜாமின் க டந்த மூன்று மாதங்களாக தலைமறைவாக இருந்த ஹர்மித் சிங், ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பஞ்சாபி இணைய டிவிக்கு நேற்று முன்தினம் பேட்டி அளித்தார்.
இதில் அவர் கூறுகையில், “அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, என் மீது பொய் புகார்கள் சுமத்தப்பட்டுள்ளன. இவ்வழக்கில் ஜாமின் பெற்றபின் பஞ்சாபிற்கு வருகை தருவேன். நீதித்துறையின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது,” என்றார்.

