ADDED : செப் 21, 2024 10:15 PM

அமிர்தசரஸ்:பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வடக்கு தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., குன்வர் விஜய் பிரதாப் சிங் மனைவி மதுமிதா, 48, உடல் நலக்குறைவால் நேற்று அதிகாலையில் மரணம் அடைந்தார்.
உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் நேற்று முன் தினம் சேர்க்கப்பட்ட மதுமிதா, நேற்று அதிகாலை 2:30 மணிக்கு மரணம் அடைந்தார். விஜய் பிரதாப் சிங் - மதுமிதா தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
பஞ்சாப் மாநில அமைச்சர் ஹர்பஜன் சிங், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., அஜய் குப்தா, காங்கிரஸ் எம்.பி., குர்ஜித் சிங் அவுஜ்லா மற்றும் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் இறுதிச் சடங்கில் பங்கேற்றனர்.
பஞ்சாப் தல்வர் பகவந்த் மான் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ அமிர்தசரஸ் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., குன்வர் விஜய் பிரதாப் சிங் மனை மதுமிதா திடீர் மரணம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்,”என, கூறியுள்ளார்.
பஞ்சாப் மாநில கேடர் ஐ.பி.எஸ்., அதிகாரியான குன்வர் சிங், பணியை ராஜினாமா செய்து விட்டு ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தவர்.