இல்லாத ரோடுக்கு கட்டண வசூல்: சுங்கச்சாவடி மீது தாக்குதல்
இல்லாத ரோடுக்கு கட்டண வசூல்: சுங்கச்சாவடி மீது தாக்குதல்
ADDED : ஜூலை 09, 2025 02:34 PM

மும்பை: மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தொண்டர்கள், சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி இருக்கிறது.
வஷிம் மாவட்டத்தில் டோன்ட்கான் சுங்கச்சாவடி இயங்கி வருகிறது. இந்த சுங்கச்சாவடி அகோலா, நந்தட் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. ஆனால் இந்த சாலையை உரிய முறையில் போக்குவரத்துக்கு மேம்படுத்தாமல் அவ்வழியாக வரும் வாகனங்களிடம் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்ததாக தெரிகிறது.
இந் நிலையில், கட்டணம் வசூலிக்கக்கூடாது என்பதை முன் வைத்து, மஹாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா அமைப்பினர் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர். கைகளில் கட்டைகளுடன் அங்கு நுழைந்த அவர்கள், அங்குள்ள கட்டண வசூல் அறைகளின் கண்ணாடிகளை சூறையாடினர்.
இதுகுறித்து வஷிம் மாவட்ட மஹாராஷ்ரா நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜூ பாட்டீல் கிட்சே கூறியதாவது: சுங்கச்சாவடியின் மறு முனையில் உள்ள சாலை போக்குவரத்துக்கு இன்னும் தயாராகவில்லை. ஆனால் அதற்கு முன்னதாக இங்கு கட்டணத்தை வசூலித்து வருகின்றனர். இதை தவிர்க்குமாறு பல முறை கூறியும் கட்டண வசூல் நிறுத்தப்படவில்லை என்றார்.
மஹாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா அமைப்பினர் நடத்திய இந்த தாக்குதலை அங்குள்ள சில தங்கள் செல்போன்களில் வீடியோவாக பதிவிட்டு சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளனர்.