ADDED : மே 05, 2024 09:49 AM

ராய்ப்பூர்: மொபைல் போன் பயன்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்த அண்ணனை தூங்கும் போது தங்கை வெட்டி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நண்டாகான் என்ற நகரின் அருகே கைராகார் சுயூகாதன் காண்டாய் ( கேசிஜி ) என்னும் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி. இவர் அடிக்கடி போனில் ஆண் நண்பர்களுடன் பேசியுள்ளார். இதனை இவரது அண்ணன் கண்டித்துள்ளார். மேலும் நண்பர்களிடம் பேசுவதை தவிர்க்குமாறும், போன் பயன்பாட்டை நிறுத்துமாறும் வலியுறுத்தி உள்ளார்.
இதனால் ஆத்திரமுற்ற சிறுமி அண்ணன் தூங்கி கொண்டிருந்த போது கோடாரியால் கழுத்தின் தொண்டை பகுதியில் ஓங்கி வெட்டினார். அண்ணன் வீட்டுக்குள்ளே இறந்தார் . இதில் சிறுமி அணிந்திருந்த உடைகள் ரத்தத்தில் நனைந்தன. இதனை துடைத்து விட்டு அருகில் வசிப்பவர்களிடம் அண்ணனை கொன்று விட்டதாக கூறியுள்ளார். இதனையடுத்து போலீசார் பிணத்தை கைப்பற்றி தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.