பார்லி.யில் கோஷமிட்ட எம்.பி.,க்கு குடிநீர் வழங்கிய மோடி
பார்லி.யில் கோஷமிட்ட எம்.பி.,க்கு குடிநீர் வழங்கிய மோடி
UPDATED : ஜூலை 03, 2024 12:49 AM
ADDED : ஜூலை 02, 2024 11:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: பார்லி.யில் கோஷம் எழுப்பிய , எம்.பி., ஒருவருக்கு தன் கையால் குடிநீர் வழங்கினார் பிரதமர் மோடி.
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இன்று நடந்த விவாதத்திற்கு பிரதமர் பதில் அளித்து பேசினார். அப்போது, அவரை பேசவிடாமல் எதிர்க்கட்சியினர் கோஷம் எழுப்பிக்கொண்டே இருந்தனர். இதனை மோடி பொருட்படுத்தாமல் பேசினார்.
அப்போது மோடிக்கு அலுவலக உதவியாளர் குடிநீர் கொண்டு வந்தார். உடனே அந்த குடிநீரை தான் அருந்தாமல், கோஷம் எழுப்பிக்கொண்டிருந்த , எம்.பி. ஒருவருக்கு பிரதமர் மோடி குடிநீர் வழங்கி அவரை ஆசுவாசப்படுத்தினார். இதன் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.