sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கும்ப மேளாவில் சோகம்; நெரிசலில் சிக்கிய பக்தர்கள் 30 பேர் உயிரிழப்பு!

/

கும்ப மேளாவில் சோகம்; நெரிசலில் சிக்கிய பக்தர்கள் 30 பேர் உயிரிழப்பு!

கும்ப மேளாவில் சோகம்; நெரிசலில் சிக்கிய பக்தர்கள் 30 பேர் உயிரிழப்பு!

கும்ப மேளாவில் சோகம்; நெரிசலில் சிக்கிய பக்தர்கள் 30 பேர் உயிரிழப்பு!

43


UPDATED : ஜன 30, 2025 08:11 AM

ADDED : ஜன 29, 2025 07:12 AM

Google News

UPDATED : ஜன 30, 2025 08:11 AM ADDED : ஜன 29, 2025 07:12 AM

43


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிரயாக்ராஜ்: பிரயாக்ராஜ் கும்பமேளாவில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக, உயிரிழந்த பக்தர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.

உ.பி., மாநிலம் பிரயாக்ராஜில் ஜன.13ம் தேதி மகா கும்பமேளா விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் லட்சக்கணக்கானோர் விழாவில் பங்கேற்று வருகின்றனனர். திரிவேணி சங்கமத்தில் நாள்தோறும் ஏராளமானோர் கலந்து கொண்டு புனித நீராடி வருகின்றனர்.

மவுனி அமாவாசையான இன்று (ஜன.29) கும்பமேளாவில் கலந்து கொண்டு, நீராட லட்சக்கணக்கானோர் திரண்டனர். இந்நிலையில் இன்று 29ம் தேதி அதிகாலை 1 மணிக்கு மேல் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால், அங்கு திடீர் பரபரப்பு நிலவியது. ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு முன்னேறியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலர் மயங்கி விழுந்தனர்.

கூட்ட நெரிசலைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், மீட்பு குழுவினர் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அங்கு தற்போதைய நிலை கட்டுக்குள் இருப்பதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கும்பமேளா கூட்ட நெரிசலை அறிந்த பிரதமர் மோடி உடனடியாக முதல்வர் யோகி ஆதித்யநாத்தை தொடர்பு கொண்டார். அங்குள்ள நிலைமையை கேட்டறிந்த அவர், தேவையாக நடவடிக்கைகளை எடுக்கும் படி அறிவுறுத்தி உள்ளார்.

உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மகா கும்ப மேளா நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்கள் பிரயாக்ராஜுக்கு வாருங்கள், நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள கங்கை படித்துறையில் குளிக்க வேண்டும். திரிவேணி சங்கமம் வர அவசியமில்லை.

நீங்கள் அனைவரும் நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி ஒத்துழைக்க வேண்டும். சங்கத்தின் அனைத்து படித்துறைகளிலும் பக்தர்கள் அமைதியான முறையில் குளித்து வருகின்றனர். எந்த வதந்திகளுக்கும் இடம் தரக் கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சம்பவம் நிகழ்ந்த தருணம் முதற்கொண்டு குறிப்பிட்ட கால இடைவெளியில் பிரதமர் மோடி, ஆதித்யநாத்தை 3 முறை தொடர்பு கொண்டு அங்குள்ள நிலைமையை கேட்டறிந்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், தொடர்பு கொண்டு நடந்த விவரங்களை கேட்டறிந்தார்.

இன்று அதிகாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த பக்தர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளதாக, உ.பி., போலீசார் தற்போது அறிவித்துள்ளனர். இவர்களில் 25 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மற்ற 5 பேரையும் அடையாளம் காணும் முயற்சி நடந்து வருகிறது என்று மகா கும்ப மேளா டி.ஐ.ஜி., வைபவ் கிருஷ்ணா அறிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us