sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 தலைவர்களுடன் மோடி பேச்சு

/

 தலைவர்களுடன் மோடி பேச்சு

 தலைவர்களுடன் மோடி பேச்சு

 தலைவர்களுடன் மோடி பேச்சு

1


ADDED : மார் 04, 2026 03:35 AM

Google News

ADDED : மார் 04, 2026 03:35 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி : மேற்காசியாவில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், குவைத் பட்டத்து இளவரசர் ஷேக் சபா அல் காலித் மற்றும் ஓமன் சுல்தான் ஹாய்தம் பின் தாரிக் ஆகியோருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசி தன் கவலையை தெரிவித்தார்.

மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் துவங்கியுள்ளதை அடுத்து, மேற்காசிய நாடுகளில் போர் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில் ஓமன் சுல்தான் ஹாய்தம் பின் தாரிக் மற்றும் குவைத் பட்டத்து இளவரசர் ஷேக் சபா அல் காலித் அல் ஹமித் அல் சபா ஆகியோருடன் தொலைபேசியில் பிரதமர் மோடி நேற்று பேசினார்.

அப்போது அந்த நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு தன் கவலையை தெரிவித்தார். மேலும் அங்கு வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நலம் குறித்தும் கேட்டறிந்தார்.

முன்னதாக கடந்த இரண்டு நாட்களாக பஹ்ரைன் மன்னர் மற்றும் சவுதி அரேபியா பட்டத்து இளைவரசர் ஆகியோரையும் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அந்த நாடுகள் மீதான தாக்குதலுக்கு கவலை தெரிவித்தார். இது தவிர ஜோர்டான் மன்னர் அப்துல்லாவுடனும் மோடி பேசினார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனும் மோடி மோடி பேசினார்.






      Dinamalar
      Follow us