மாறிக் கொண்டே இருக்கும் மோடியின் மனம்: பிரியங்கா விமர்சனம்
மாறிக் கொண்டே இருக்கும் மோடியின் மனம்: பிரியங்கா விமர்சனம்
ADDED : மே 28, 2024 04:06 PM

சிம்லா: ''பிரதமர் மோடி ஆரம்பத்தில் 400 இடங்களில் வெல்வோம் என்றார், பின்னர் அப்படி சொல்வதை நிறுத்தினார், இப்போது மீண்டும் சொல்ல ஆரம்பித்து விட்டார். அவரது மனம் மாறிக்கொண்டே இருக்கிறது'' என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பிரியங்கா கூறியதாவது: பிரதமர் மோடி ஆரம்பத்தில் 400 இடங்களில் வெல்வோம் என சொல்லத் துவங்கினார். பின்னர் அப்படி சொல்வதை நிறுத்திவிட்டார். இப்போது மீண்டும் ஒருமுறை சொல்ல ஆரம்பித்து விட்டார். இப்படி அவரது மனம் மாறிக்கொண்டே இருக்கிறது. எதன் அடிப்படையில் இப்படி சொல்கிறார் எனத் தெரியவில்லை. அவருடைய அரசியலால் மக்கள் சோர்ந்து போயிருக்கிறார்கள். இதையெல்லாம் கேட்டு பொதுமக்கள் அலுத்துவிட்டனர்.
பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் மற்றும் தாங்கள் அனுபவிக்கும் பிரச்னைகள் பற்றியே மக்கள் கேட்க விரும்புகிறார்கள். பண பலத்தால் ஹிமாச்சல பிரதேசத்தில், மக்கள் தேர்ந்தெடுத்த அரசை கவிழ்க்க முயற்சித்து, ஜனநாயகத்திற்கு எதிரான குற்றங்களை வெளிப்படையாகவே செய்கிறார்கள். அவர் நாட்டின் பிரதமர்; அவரது வார்த்தைகளுக்கு நான் என்ன கருத்து கூற முடியும்?. இவ்வாறு அவர் கூறினார்.