sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பண மோசடி வழக்கு: ஜேபி குழுமத்தின் ரூ.400 கோடி சொத்துக்களை முடிக்கியது அமலாக்கத்துறை

/

பண மோசடி வழக்கு: ஜேபி குழுமத்தின் ரூ.400 கோடி சொத்துக்களை முடிக்கியது அமலாக்கத்துறை

பண மோசடி வழக்கு: ஜேபி குழுமத்தின் ரூ.400 கோடி சொத்துக்களை முடிக்கியது அமலாக்கத்துறை

பண மோசடி வழக்கு: ஜேபி குழுமத்தின் ரூ.400 கோடி சொத்துக்களை முடிக்கியது அமலாக்கத்துறை


ADDED : ஜன 07, 2026 10:06 PM

Google News

ADDED : ஜன 07, 2026 10:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:ஜேபி குழுமத்தின் பணமோசடி வழக்கு தொடர்பாக, அமலாக்கத்துறை இன்று (ஜனவரி 7) ரூ.400 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை தற்காலிகமாக முடக்கியுள்ளது.

ஜேபி இன்ப்ராடெக் லிமிடெட் மற்றும் ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் 25,000-க்கும் மேற்பட்ட வீடு வாங்குபவர்களிடம் இருந்து சுமார் ரூ.14,599 கோடி வசூலித்தன. இதில் பெரும் பகுதி நிதி ஜேபி ஹெல்த்கேர் மற்றும் ஜேபி ஸ்போர்ட்ஸ் போன்ற பிற நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக மாற்றப்பட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது.இந்த நிதி மடைமாற்றத்தில் முக்கியப் பங்காற்றியதாக, ஜேபி குழுமத்தின் முன்னாள் தலைவர் மனோஜ் கவுர் கடந்த நவம்பர் 13 ஆம் தேதி அன்று கைது செய்யப்பட்டு, தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளார்.

ஏற்கனவே கடந்த மே மாதத்தில் டில்லி, நொய்டா, மும்பை உள்ளிட்ட 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களையும், ரூ.1.70 கோடி ரொக்கத்தையும் பறிமுதல் செய்திருந்தது. இந்த நிலையில் இன்று ரூ.400 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை தற்காலிகமாக அமலாக்கத்துறை முடக்கியது.

இது குறித்து அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கை:நொய்டாவில் உள்ள ஜேபி விஷ்டவுன் மற்றும் ஜேபி கிரீன்ஸ் ஆகியவை குடியிருப்புத் திட்டங்களுக்காகச் சேகரிக்கப்பட்ட நிதியை, கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தாமல் மற்ற குழு நிறுவனங்களுக்கு மடைமாற்றியதாக குற்றம்சாட்டப்பட்டநிலையில், இன்று ஜேபி குழுமத்துடன் தொடர்புடைய ஜெய் பிரகாஷ் சேவா சன்ஸ்தா என்ற அறக்கட்டளை மற்றும் ஹனி கத்தியால் என்பவரின் கட்டுப்பாட்டில் உள்ள பேஜ் 3 பில்டெக் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்குச் சொந்தமான ரூ.400 அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான வீடு வாங்குபவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய நிலையில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us