ராஜஸ்தானையும் விட்டு வைக்காத மோந்தா; 23 மாவட்டங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள்
ராஜஸ்தானையும் விட்டு வைக்காத மோந்தா; 23 மாவட்டங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள்
ADDED : அக் 28, 2025 05:17 PM

ஜெய்பூர்; மோந்தா புயல் காரணமாக ராஜஸ்தானிலும் கனமழை பெய்து வருகிறது. அதிகளவாக நைன்வா பகுதியில் 130 மிமீ மழை பதிவாகி உள்ளது.
வங்கக்கடலில் உருவாகி, ஆந்திராவை மோந்தா புயல் கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. புயல் காரணமாக கடலோர மாவட்டங்கள் கனமழையை சந்தித்து வருகின்றன. புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 110 கிமீ வேகத்தில் காற்றின் வேகம் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை அறிவிப்பு ஒரு பக்கம் இருக்க, மறுபுறம் மோந்தா புயலின் தாக்கம் ராஜஸ்தானிலும் எதிரொலித்து உள்ளது. அம்மாநிலத்தின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.
அதிகளவாக நைன்வா பகுதியில் கிட்டத்தட்ட 130 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. உதய்பூர், கோட்டா என மாநிலத்தின் மற்ற பகுதிகளும் மழைக்கு தப்பவில்லை. கனமழை மேலும் வலுக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், பாதிப்புகள் நிகழலாம் என்று அறியக்கூடிய 23 மாவட்டங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டு உள்ளன.

