கள்ளக்காதலுக்கு இடையூறு; மகனை கொல்ல முயன்ற தாய் கைது
கள்ளக்காதலுக்கு இடையூறு; மகனை கொல்ல முயன்ற தாய் கைது
ADDED : மே 20, 2025 06:57 AM

பாலக்காடு : பாலக்காடு அருகே, கள்ளக்காதலுக்கு இடையூறாக நினைத்து, நான்கு வயது மகனை கிணற்றில் வீசி கொலை செய்ய முயன்ற தாயை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், வாளையார் மங்கலத்தான்சள்ளை பாம்பாம்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் ஸ்வேதா,22. இவர், கோவையில் உள்ள துணிக்கடையில் வேலை பார்க்கிறார். கணவனை பிரிந்து, நான்கு வயது மகனுடன் பெற்றோர் வீட்டில் வாழ்கிறார்.
இந்நிலையில், கடந்த 17ம் தேதி மாலை ஸ்வேதா, தனது மகனை வீட்டின் அருகே உள்ள கிணற்றில் வீசி கொலை செய்ய முயன்றார். ஆனால், குழந்தை அதிர்ஷ்டவசமாக மோட்டார் குழாயில் சிக்கியது. குழந்தையில் அழுகுரல் கேட்டதால், அப்பகுதி மக்கள் ஓடி வந்து, கிணற்றில் இருந்து குழந்தையை மீட்டனர். குழந்தைக்கு எவ்வித காயங்களும் இல்லை.
இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த இன்ஸ்பெக்டர் ராஜீவ் தலைமையிலான, வாளையார் போலீசார், கொலை முயற்சி மற்றும் சிறார் நீதி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ஸ்வேதாவை கைது செய்தனர்.
போலீசார் கூறுகையில், 'கணவனை பிரிந்து வாழும் ஸ்வேதாவுக்கு, கோவையை சேர்ந்த வேறு ஒருவருடன் தொடர்பு உள்ளது.
இதற்கு, மகன் இடையூறாக இருப்பதாக நினைத்து, பெற்ற மகனை கொலை செய்ய துணிந்துள்ளார்,' என்றனர்.

