ADDED : நவ 22, 2025 12:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு: இடுக்கி மாவட்டம், அடிமாலி அருகே பணிக்கன்குடியில், கட்டுமான தொழிலாளி ஷாலட். இவரது மனைவி ரஞ்சினி, 30.
தம்பதியின் மகன் ஆதித்தியன், 4. நேற்று முன்தினம் மாலை 5:30 மணிக்கு, கணவர் ஷாலட்டை மொபைல்போனில் தொடர்பு கொண்ட ரஞ்சினி, மகனை கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறினார்.
அதிர்ச்சியுற்ற ஷாலட் வேலையிலிருந்து வீட்டிற்கு ஓடி வந்தார். அப்போது, வீட்டினுள் ஆதித்தியன் துாக்கில் உயிருக்கு போராடிய நிலையில் இருந்தார்.
அவரை, மருத்துவமனைக்கு எடுத்து சென்றபோது வழியில் இறந்தார். ரஞ்சினி வீட்டினுள் துாக்கில் தொங்கியவாறு இறந்து கிடந்தார்.
வெள்ளத்துாவல் போலீசார் விசாரிக்கின்றனர்.

