ADDED : நவ 22, 2025 12:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு: சத்திரம், புல்மேடு வனப்பாதை வழியாக சபரிமலை சென்ற ஆந்திராவைச் சேர்ந்த அய்யப்ப பக்தர் மயங்கி விழுந்து இறந்தார்.
ஆந்திராவை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் 25 பேர் கொண்ட குழு சத்திரம், புல்மேடு வழியாக வனப்பாதையில் நேற்று முன்தினம் நடந்து சென்றனர்.
அங்குள்ள சீதக்குளம் பகுதிக்குச் சென்ற போது, மல்லிகார்ஜுனரெட்டி, 42, என்பவர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.
அதுபோல, இந்த பாதையில் சபரிமலைக்கு நடந்து சென்ற, சேலத்தை சேர்ந்த அமிர்தலிங்கம், 57, திருப்பதியைச் சேர்ந்த ஜிதேந்திரன், 42, ஆகியோருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த சன்னிதானம் தீயணைப்பு துறையினர் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

