ADDED : செப் 07, 2026 11:35 PM
பாலக்காடு:
கேரளாவில் தாய் மற்றும் மகளை கொடூரமாக வெட்டி கொலை செய்துவிட்டு, சாக்கு மூட்டைகளில் கட்டி ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் அட்டப்பாடியில் உள்ள பவானி ஆற்றில் மூன்று சாக்கு மூட்டைகள் மிதப்பதை கண்டு அப்பகுதி மக்கள் சந்தேகம் அடைந்தனர். இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் அப்பகுதிக்கு வந்து மூட்டைகளை பிரித்து பார்த்தபோது 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் சடலமும், ஐந்து வயது பெண் குழந்தையின் சடலமும் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இரு சடலங்களையும் துண்டு, துண்டாக வெட்டி மூட்டைகளில் கட்டி ஆற்றில் வீசியது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், மேற்கு வங்கத்தை சேர்ந்த நபருக்கு தொடர்பு இருக்கலாம் என தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள அந்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
