உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : செப் 07, 2026 11:35 PM
அ நிறம் | அளவு
மூணாறு, செப்.8-–
கேரளாவில் நாளை வரை வெயில் சுட்டெரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவ மழை ஜூன் மாதத்தில் தொடங்கி செப்டம்பர் இறுதிவரை நீடிக்கும். இந்தாண்டு பருவமழை பொய்த்து ஆகஸ்ட்டில் மட்டுமே சற்று மழை பெய்தது. தற்போது செப்டம்பரில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் நாளை வரை இயல்பை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
