ADDED : ஜன 02, 2025 05:45 AM
ராய்ச்சூர்: ராய்ச்சூர், தேவதுர்கா தாலுகாவில் உள்ள மசீதாபுரா கிராமத்தைச் சேர்ந்த சிவலிங்கம்மா, 22. இவர் பிரசவத்திற்காக அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சையின்போது, அவருக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு, உடல்நிலை மோசமானது. இதனால் டிச., 27 ம் தேதி அன்று, ராய்ச்சூர் ரிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை வரும் வழியில் ஆறு முறை ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது.
ரிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சிவலிங்கம்மா, உயர் ரத்த அழுத்த பிரச்னையால் அவதிப்பட்டுள்ளார்.
இதற்கிடையில் அவருக்கு சிசேரியன் எனும் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடந்தது. அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அப்போதும் அதிகமான ரத்தம் வெளியேறியது. இதனால், அவரின் உடல் நிலை மோசமானது. தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி, நேற்று அதிகாலை 4:30 மணி அளவில் உயிரிழந்தார். இதே போன்று குழந்தையும் இறந்தது.
ராய்ச்சூர் ரிம்ஸ் மருத்துவமனையில் சிசேரியன் செய்யப்பட்ட பெண்ணும், பெண் குழந்தையும் இறந்தனர்.