தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/குழந்தையை கொன்ற தாய் 3 ஆண்டுகளுக்கு பின் கைது

குழந்தையை கொன்ற தாய் 3 ஆண்டுகளுக்கு பின் கைது

குழந்தையை கொன்ற தாய் 3 ஆண்டுகளுக்கு பின் கைது


UPDATED : அக் 21, 2026 08:05 PM

ADDED : அக் 21, 2026 07:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2026 08:05 PM ADDED : அக் 21, 2026 07:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவனந்தபுரம்:

கேரளாவில் கள்ளகாதலுக்கு இடையூறாக இருந்த இரண்டு வயது பெண் குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்த தாய் மூன்று ஆண்டுகளுக்குப் பின் கைது செய்யப்பட்டார்.

பாலக்காடு மீங்கரை பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சு 45, சங்கனாச்சேரியில் தனது இரண்டு வயது குழந்தையுடன் வசித்தார். இவருக்கு சிவா 35, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. 3 ஆண்டுகளுக்கு முன் மஞ்சு வீட்டுக்கு சிவா வந்தபோது குழந்தை அழுதது. அப்போது குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்தனர். உடலை பத்தனம்திட்டா மாவட்டம் புளிக்கீழ் பகுதியில் போட்டனர். அதற்கு பின் உடலை மீட்ட போலீசார், 3 ஆண்டுகளாக கொலையாளிகளை பிடிக்க முடியாமல் திணறினர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மஞ்சுவிற்கும், சிவாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது குழந்தையை கொன்றது தொடர்பாக இருவரும் சண்டை போட்டனர். இதை கேட்ட அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவலளித்தனர். தொடர்ந்து போலீசார் அங்கு சென்று மஞ்சுவை கைது செய்தனர். அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். தலைமறைவான சிவாவை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us