தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/உயிரிழந்த போலீசாருக்கு வீரவணக்க நாள் அனுசரிப்பு

உயிரிழந்த போலீசாருக்கு வீரவணக்க நாள் அனுசரிப்பு

உயிரிழந்த போலீசாருக்கு வீரவணக்க நாள் அனுசரிப்பு


UPDATED : அக் 21, 2026 07:11 PM

ADDED : அக் 21, 2026 07:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2026 07:11 PM ADDED : அக் 21, 2026 07:08 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: நாடு முழுதும் பாதுகாப்பு பணியின்போது வீரதீர செயல்களில் ஈடுபட்டு உயிரிழந்த போலீசாரை நினைவை போற்றும் வகையில் வீரவணக்க நாள் ஆண்டுதோறும் அக்.21ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

அதன்படி, கோரிமேடு போலீஸ் மைதானத்தில் நடந்த போலீஸ் வீரவணக்க நாள் நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பங்கேற்று, காவலர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, மலர்துாவி வீரவணக்கம் செலுத்தினர். தொடர்ந்து போலீஸ் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டனர்.

இதில், அரசு கொறடா ஆறுமுகம், டி.ஜி.பி., ஷாலினி சிங், டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், சீனியர் எஸ்.பி.,க்கள் கலைவாணன், நித்யா ராதாகிருஷ்ணன், எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, கடந்த ஓராண்டில் பணியின்போது உயிர்நீத்த 9 போலீசாரின் தியாகத்தை நினைவுகூறும் வகையில், 21 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க, இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us