UPDATED : அக் 21, 2026 06:16 PM
ADDED : அக் 21, 2026 06:14 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: லாஸ்பேட்டை, குறிஞ்சி நகரில் புதிதாக அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மர்களை அமைச்சர் சிவக்கொழுந்து இயக்கி வைத்தார்.
லாஸ்பேட்டை தொகுதி, குறிஞ்சி நகர் பகுதியில் நிலவிய மின் தட்டுப்பாடு மற்றும் பற்றாக்குறையை போக்க 315 கிலோ வாட் திறன் கொண்ட 2 டிரான்ஸ்பார்மர்கள், குறிஞ்சி நகர், சமுதாய நலக்கூடம் மற்றும் குறிஞ்சி நகர் 10வது குறுக்கு தெருவில் புதிதாக அமைக்கப்பட்டது.
இதை அமைச்சர் சிவக்கொழுந்து பூஜை செய்து, இயக்கி வைத்தார்.
செயற்பொறியாளர் பன்னீர்செல்வம், உதவிப்பொறியாளர் கில்பர்ட் ஜேம்ஸ், இளநிலை பொறியாளர் பவித்ரன், நோயல் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
