ADDED : அக் 21, 2026 06:16 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: குமரகுருபள்ளம் ஆயில் மில் வீதியை சேர்ந்தவர் சத்தியநாதன்,46; தச்சு தொழிலாளி. இவர் குடிபழக்கத்திற்கு அடிமையாகி தினமும் மது குடித்துவிட்டு வந்தார்.
நேற்று இரவு அதிகமாக மது குடித்து விட்டு வந்த சத்தியநாதன், அறையில் படுத்து துாங்கினார். இன்று அதிகாலை மயங்கி கிடந்த அவரை, குடும்பத்தினர் மீட்டுனா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் வழியிலேயே இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்தார்.
புகாரின் பேரில் பெரியகடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
