ம.பி.யில் முன்னாள் காங்., எம்.எல்.ஏ,, பா.ஜ.வில் ஐக்கியம்
ம.பி.யில் முன்னாள் காங்., எம்.எல்.ஏ,, பா.ஜ.வில் ஐக்கியம்
UPDATED : ஏப் 30, 2024 10:58 PM
ADDED : ஏப் 30, 2024 09:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போபால்: ம.பி.யில் காங்., தலைவர்கள் சிலர் பா.ஜ.வில் இணைவது அதிகரித்துவரும் நிலையில் இன்று ( 30.04.2024 ) முன்னாள் காங்., எம்.எல்.ஏ., ராம்நிவாஸ் ராவத் பா.ஜ.,வில் இணைந்தார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த சில மாதங்களில், காங்., கட்சியைச் சேர்ந்தவர்கள் பா.ஜ., பக்கம் வருவதாகவும், இவர்களில் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று ( 30.04.2024 ) முன்னாள் காங்., எம்.எல்.ஏ, ராம்நிவாஸ் ராவத் அக்கட்சியிலிருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்தார்.
இவர் காங்., சார்பில் 6 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தார். ம.பி.யின் ஷோப்பூரில் பா.ஜ., முதல்வர் மோகன் யாதவ் பங்கேற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் முன்னிலையில் பா.ஜ.வில் இணைந்தார்.

